33.9 C
Chennai
September 26, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

சமூக வலைதளங்களில் முகப்புப் படத்தை மாற்றுங்கள்: பிரதமர் மோடி ட்விட்!

சுதந்திர தின நாளையொட்டி சமூக வலைதள பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றுங்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று நாட்டின் 76-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லி உட்பட, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். அதேபோல், அந்தந்த மாநிலங்களில், அம்மாநில முதலமைச்சர்கள் தேசிய கோடி ஏற்றி அம்மாநில மக்களிடையே உரையாற்றுவது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில், டெல்லி செங்கோட்டையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றும் விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து PM-KISAN திட்டத்தின் பயனாளிகள் உட்பட சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்களை மத்திய அரசு அழைத்துள்ளது. இந்நிலையில் சுதந்திர நாளையொட்டி சமூக வலைதள பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றுங்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர நாளையொட்டி ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்திற்காக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்களின் முகப்புப் படத்தை மாற்ற வேண்டும். நமது நாட்டுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பை பறைசாற்றும் வகையில் இத்தனித்துவமான முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

G SaravanaKumar

ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கேஷ்பேக் சலுகை

G SaravanaKumar

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: இபிஎஸ் இடையீட்டு மனுவிற்கு தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் என்ன?

Lakshmanan