‘சந்திரமுகி -2’ திரைப்படம் வெற்றியடைய வேண்டி படக்குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ பேடம்மா கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.
இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, கங்கனா ரணாவத் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது. இந்த படத்தில் மொத்தம் 10 பாடல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திரமுகி 2 படத்தின் டிரைலர் வெளியீடு பற்றி ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
சந்திரமுகி-2 படத்தின் 2வது டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலர் தற்போது வைரலாகி வருகிறது.
படம் வரும் செப்.28ஆம் நாள் வெளியாக உள்ளது. அதனால் படத்தை புரமோஷன் செய்யும் பணியில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், ‘சந்திரமுகி -2’ திரைப்படம் வெற்றியடைய வேண்டி படக்குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ பேடம்மா கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
Aaj subah we seeked Sri Peddamma Thalli blessings for our upcoming relase #Chandramukhi2
Four day to go 🙂 pic.twitter.com/ugUNvbgVjj— Kangana Ranaut (@KanganaTeam) September 24, 2023







