தமிழகம், புதுவையில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! -வானிலை ஆய்வு மையம்

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால், ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் 28ஆம் தேதிக்கு முன்பாக கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் டிசம்பர் ஒன்று வரை 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

இதனால் , கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.