தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை தீவிரம் காரணமாக 10 மணி வரையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை…

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை தீவிரம் காரணமாக 10 மணி வரையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தீவிரமடையும் என்று தெரிவித்தது போல தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி இருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் ஒரு சில கடலோர மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 15 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.