தமிழ்நாட்டில் வந்தே பாரத் சாதாரண ரயில் இயக்கப்படுமா? மத்திய அமைச்சர் பதில்!

தமிழ்நாட்டில் அதிவிரைவு வந்தே பாரத் சாதாரண ரயில்கள் இயக்கப்படுமா என்ற வைகோ கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். வைகோ எழுப்பிய கேள்விகள்: ரயில்வே, சாமானிய மக்களுக்காக ஏசி அல்லாத அதிவிரைவு…

தமிழ்நாட்டில் அதிவிரைவு வந்தே பாரத் சாதாரண ரயில்கள் இயக்கப்படுமா என்ற வைகோ கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

வைகோ எழுப்பிய கேள்விகள்:

  • ரயில்வே, சாமானிய மக்களுக்காக ஏசி அல்லாத அதிவிரைவு வந்தே சாதாரண ரயிலின் சோதனை ஓட்டத்தை இந்திய ரயில்வே நடத்தியதா?
  • தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற ஏழை மக்களுக்கு சாதாரண படுக்கை மற்றும் பொது வகுப்பு வசதிகள் உள்ளதா?அப்படியானால், கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் யாவை?
  • வந்தே சதாரண ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் வழித்தடங்களில் தமிழகமும் உள்ளடங்குமா?
  • அப்படியானால், இந்த ரயில்கள் எப்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளன?

ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில்:-

இந்திய ரயில்வேக்கு வந்தே பாரத் சதாரண ரயில் இல்லை.  ரயில்வே தொடர்பு மாநில எல்லைகளைத் தாண்டிச் செல்லும் போது,  அதன் தேவைக்கேற்ப, எல்லைகளைத் தாண்டி ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.  ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது என்பது இந்திய ரயில்வேயின் போக்குவரத்து செயல்பாட்டுச் சாத்தியங்கள் மற்றும் நிதிநிலை போன்றவற்றுக்கு உட்பட்டவையாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.