ஆர்டிஓ அலுவலகத்தில் இனி தேர்வு இல்லை!

அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சிக்கான சான்றிதல் பெற்றால் இனி நேரடியாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி…

அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சிக்கான சான்றிதல் பெற்றால் இனி நேரடியாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருந்தால், ஓட்டுநர் உரிமத்திற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு தேர்வு கிடையாது என்ற விதியை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் பரிசீலித்தது. அதன்பின் மக்கள் இதுகுறித்து தங்களது கருத்தை தெரிவிக்கலாம் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று இதுதொடர்பாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சிக்கான சான்றிதல் பெற்றால் இனி நேரடியாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். அவர்கள் தனியாக ஆர்டிஓ அலுவலகங்களில் ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க தேவையில்லை என தெரிவித்துள்ளது. மேலும், இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.