முக்கியச் செய்திகள் இந்தியா

ஆப்கன் விவகாரம்; அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்க நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஆப்கனில் இருந்து வெளியேற மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற அனைத்து கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தானின் நிலவரம் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிப்பதா? அல்லது புறக்கணிப்பதா? என்பது குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Halley karthi

நாமக்கல்லில் 2.70 டன் புகையிலை, குட்கா பறிமுதல்

Jeba Arul Robinson

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: அச்சத்தில் மக்கள்!

Halley karthi