சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்தப்பட்டன. இந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் சிபிஎஸ்இ சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.cbse.nic.in , www.cbseresults.nic.in , www.cbseresults.gov.gov.in மற்றும் www.cbse.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்தனர்.
மாணவர்களிடையே தேவையற்ற போட்டியை தவிர்க்க இந்த ஆண்டு நடைபெற்ற +2 பொதுத்தேர்வில், யார் முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் என்பதை சிபிஎஸ்இ அறிவிக்கவில்லை.
நடப்பாண்டு தேர்ச்சி சதவீதம் 87.33% என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை (92.71 %) ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பது தெரிகிறது.







