கனடா சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து கார்லோஸ் அல்காரஸ் விலகல்!

கனடா சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து நம்பர் 2 வீரரான கார்லோஸ் அல்காரஸ் விலகுவதாக அறிவித்து உள்ளார்.

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் டென்னிஸ் ரசிகர்கள் இந்த தொடரை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

இந்நிலையில், நம்பர் 2 வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ் இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார். கார்லோஸ் அல்கராஸ்
கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் ஐந்து முறை சாம்பியன் பட்டம வென்றவராவார். மேலும் உலகின் இரண்டாம் நிலை வீரராகவும் உள்ளார்.

ஏற்கனவே தொடரில் இருந்து நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நம்பர் 5 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் ஆகியோர் விலகி உள்ளதாக அறிவித்துள்ளனர். முன்னணி வீரர்கள் விலகி உள்ளதால் டென்னிஸ் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.