முக்கியச் செய்திகள்இந்தியா

இமாச்சலில் ஆற்றில் கவிழ்ந்த கார் – சைதை துரைசாமியின் மகன் மாயம்..!

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்லஜ் ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் தனது நண்பர்களுடன் காரில் இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அம்மாநிலத்தின் கஷாங் நளா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லெஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. வெற்றி துரைசாமியின் நண்பர் ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மட்டும் காணாமற்போன நிலையில், அவரை அம்மாநில காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : பூண்டு விலை கடும் உயர்வு – கிலோ ரூ.500-க்கு விற்பனை..!

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சென்னை காவல்துறையில் இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. சினிமா தயாரிப்பு நிறுவன பணிக்காக வெற்றி துரைசாமி இமாச்சல் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

டான் படம் நிகழ்த்திய வசூல் சாதனை!

EZHILARASAN D

‘அக்னிபாத்’ – கோவையில் மாணவர் அமைப்பினர் ரயில் மறியல்

Halley Karthik

ஆன்லைன் மூலம் போதைப் பொருள் விற்பனை; 10பேரை அதிரடியாக கைது செய்த காவல்துறை

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading