உத்தரபிரதேசத்தில் பட்டப்பகலில் தொழிலதிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜான்பூர் மாவட்டம் பாரி பகுதியை சேர்ந்த ஜெய் பிரகாஷ் சிங் மரம் அறுக்கும் ஆலை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், ஆலை முன்பு நின்று கொண்டிருந்த அவருடன் இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அப்போது அந்த கும்பலை சேர்ந்த ஒருவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஜெய் பிரகாஷை நோக்கி சுட்டார்.
இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்ற ஒருவரை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இதனிடையே தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.







