விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டிப் பந்தயம்: இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் பச்சையம்மன் பெத்தனாச்சி அம்மன் கோவில் மாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் விருதுநகர், தேனி,…

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் பச்சையம்மன் பெத்தனாச்சி அம்மன் கோவில் மாசி மாத கடைசி
வெள்ளியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி
உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள்
இப்போட்டியில் கலந்துகொள்வதற்காக வருகை புரிந்தன. போட்டி
சூரங்குடி-தூத்துக்குடி சாலையில் நடைபெற்றது.

இதையும் படிக்க: போஸ்ட்மேன் வேலைதான் ஆளுநர் வேலை; ஆனால் முதலமைச்சர்போல முடிவு எடுக்கிறார் – அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு

பூஞ்சிடு மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாட்டு வண்டி போட்டி தொடங்கியதும் காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. இப்போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.