இசை உலகில் கால்பதித்து 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள வானளாவிய கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் பிற அடையாளங்கள் ஊதா நிறத்தில் ஒளிர்ந்தது. இதனை ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தென்கொரியாவை சேர்ந்த பிடிஎஸ் இசைக்குழு 2010ஆம் உருவாக்கப்பட்டு 2013BDS band celebrates 10 years in the music worldஆம் ஆண்டில் பிக் ஹிட் என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் கீழ் அறிமுகமானது. அந்த ஆண்டில் ‘2 கூல் 4 ஸ்கூல்’ என்ற பாடல் முதன்முதலாக வெளியிடப்பட்டன. .சமூக கண்ணோட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட அவர்களின் பாடல் சமூக ஊடகங்களில் பிரபலமானது.
இவர்களின் இரண்டாவது கொரிய ஆல்பமான ‘விங்ஸ்’ (2016) என்ற ஆல்பம் தென்கொரியாவில் முதன்முதலில் 10 லட்சம் பிரதிகள் விற்று சாதனையை படைத்தது. 2017-ம் ஆண்டில் உலகளாவிய இசைசந்தையில் நுழைந்து அமெரிக்காவிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது பிடிஎஸ் இசைக்குழு.6 அமெரிக்க இசை விருதுகள், 5 பில்போர்டு மியூசிக் விருதுகள் மற்றும் 24 கோல்டன் டிஸ்க் விருதுகள், கிராமி விருது உள்ளிட்ட விருதுகளை அள்ளிக்குவித்துள்ளது பிடிஎஸ்.
இந்நிலையில் பிடிஎஸ் தனது 10ஆம் ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இதனையொட்டி தென்கொரிய உள்ளிட்ட நாடுகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அதில் ஒன்றாக சில தினங்களுக்கு முன்பு ‘Take Two’ என்ற புதிய பாடலை பிடிஎஸ் இசைக்குழு வெளியிட்டிருந்ததோடு, தென்கொரியாவில் உள்ள ஹான் நதி பிடிஎஸ்-ன் அடையாள நிறமான ஊதா நிறத்தில் ஜொலிக்க துவங்கி இருந்தது.
அந்த வரிசையில் தற்போது தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள வானளாவிய கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் பிற அடையாள சின்னங்களில் ஊதா நிற ஒளி ஊட்டப்பட்டுள்ளதோடு, இதனை ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, சிட்டி ஹால், 123-அடுக்கு லோட் வேர்ல்ட் டவர், பல ஹான் நதி பாலங்கள் மற்றும் கான்கிரீட் குவிமாடம் உட்பட பல சியோல் கட்டமைப்புகள் இதே ஊதா நிற வண்ணங்களோடு ஜொலித்து வரும் நிலையில், சியோல் முழுவதும் உள்ள கட்டிடங்களில் டிஜிட்டல் திரைகளில் BTS வாழ்த்து செய்திகளும் காட்டப்பட்டுள்ளன.
அதேபோல் அஞ்சல்துறை சார்பாகவும் BTS-ன் 10 ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் முத்திரை தாள்கள் வெளியிடப்பட்டுள்ளதோடு, இன்று முதல் தபால் நிலையங்களில் ரசிகர்கள் அதனை பெற்றும் வருகின்றனர். இது தவிர ஆன்லைனில் BTS ரசிகர்களுடன் நேரடி உரையாடல், ஆங்காங்கு பட்டாசு வெடித்து கொண்டாட்டம் சுமார் இரண்டு வாரங்களுக்கு தொடரும் இந்த கொண்டாட்டங்கள் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று சியோல் அதிகாரிகள் நம்புகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









