தென்கொரிய இசைக்கலைஞர் ஜங்கூக்கின் நெவர் லெட் கோ (Never Let Go) என்னும் பாடல் (சோலோ) இங்கிலாந்தின் அபிஷியல் சிங்கிள்ஸ் சார்ட் பட்டியலில் (UK singles chart) இடம்பெற்றுள்ளது.
உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்று தென்கொரியாவை சேர்ந்த BTS. ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த இசைக்குழு ஏராளமான இசை ஆல்பங்களையும், பாடல்களையும் வாரி வழங்கியுள்ளது. பல்வேறு கின்னஸ் சாதனைகளையும், நூற்றுக்கணக்கான விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ளது.
குழுவாக பாடல்களை வெளியிட்டு வந்த BTS குழுவினர் சமீப காலமாக தனித்தனியாக பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாடகர் ஜங்கூக்கின் நெவர் லெட் கோ (Never Let Go) என்னும் பாடல் இங்கிலாந்தின் அபிஷியல் சிங்கிள்ஸ் சார்ட் பட்டியலில் (UK singles chart) இடம்பெற்றுள்ளது. இந்நிறுவனம் இங்கிலாந்தின் ஒலிப்பதிவு துறையினால் அதிகாரப்பூர்வமாக கையாளப்படுவதாகும்.
தென்கொரியாவைச் சேர்ந்த இசைக்கலைஞரின் பாடல் (சோலோ) இந்த பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம் இதில் இடம்பெற்ற முதல் தென்கொரிய இசைக்கலைஞர் என்ற பெருமையையும் ஜங்கூக் பெற்றார்.







