உலகம்

போரிஸ் ஜான்சனின் தந்தை பிரான்ஸ் குடியுரிமை கேட்டு விண்ணப்பம்!

ஐரோப்பியாவில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதை அடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை பிரான்ஸ் நாட்டு குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியேறியது. இதையடுத்து இனிமேல் இங்கிலாந்து நாட்டு வாசிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு விசா இருந்தால்தான் பயணிக்க முடியும். இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டேன்லி ஜான்சன் பிரான்ஸ் நாட்டுக்கு குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். ஸ்டேன்லி ஜான்சன் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் எம்.பி-யாக பதவி வகித்தவராவார்.

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறக் கூடாது என்று ஓட்டுப்போட்டவர்களில் அவரும் ஒருவர். இந்நிலையில் வானொலி ஒன்றுக்கு ஸ்டேன்லி ஜான்சன் அளித்துள்ள பேட்டியில், தமது குடும்பத்துக்கு பாரம்பரியமாக பிரான்ஸ் நாட்டுடன் தொடர்பு இருப்பதாக கூறி உள்ளார். தம்முடைய தாய், பாட்டி இருவரும் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். எனவே தாம் மீண்டும் பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஸ்டேன்லி ஜான்சன் கூறி உள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சர்வதேச விமானங்கள் ரத்து!

Ezhilarasan

இஸ்ரேலில் இனி பொது இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை!

Gayathri Venkatesan

கத்தினா மட்டும் போதுங்க.. ரூ.30 ஆயிரம் சம்பளம்!

Vandhana

Leave a Reply