2 ஆண்டுகளுக்கு பிறகு சிறையிலிருந்து வெளிவந்தார் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன்

சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (உபா சட்டம்) கீழ் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் ஹத்ராஸில் பட்டியலின்…

சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (உபா சட்டம்) கீழ் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு லக்னோ உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் ஹத்ராஸில் பட்டியலின் பெண் பாலியன் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் கைது செய்யப்பட்டார். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் சித்திக் கப்பனுக்கு தொடர்பிருப்பதாக கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் (உபா) சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்குமாறு சித்திக் கப்பன் மேல்முறையீடு செய்திருந்தார். உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் மீண்டும் அவர் சட்ட விரோத பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையினர் மீண்டும் சித்திக்கை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கிலும் சித்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திக் கப்பன் சிறையிலிருந்து வெளிவருகிறார். சிறையில் அவருக்கு பல கொடுமைகள் நடந்ததாக அவர் மனைவி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறையிலிருந்து வெளிவந்த சித்திக், 28 மாதங்கள் கழித்து சிறையிலிருந்து வெளிவந்துள்ளேன். எனக்கு ஆதரவு வழங்கிய ஊடகங்களுக்கு நன்றி. மிக தவறான குற்றச்சாட்டுகள் என் மீது போடப்பட்டன. தற்போது வெளிவந்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.