முக்கியச் செய்திகள் வணிகம்

மும்பை பங்குச் சந்தையில் எழுச்சியுடன் தொடங்கியது வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் மீண்டும், 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்திய பங்குச் சந்தைகளில் காலை வர்த்தகம் தொடங்கியது முதலே இன்றும் எழுச்சியுடன் வர்த்தகம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் மீண்டும், 60 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 343 புள்ளிகள் அதிகரித்து 60,031 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 113 புள்ளிகள் அதிகரித்து, 17,911 ஆகவும் வர்த்தகம் நடைபெறுகின்றன.

இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் நடைபெறுவதற்கு காரணம், உலக நாடுகளில் பொருளாதாரம் சரிவை சந்தித்தாலும், குறையும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, இந்திய சந்தைகளில் அதிகரிக்கும் அந்நிய முதலீடு, மீண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் உள்நாட்டில் சில துறைகளில் காணப்படும் வளர்ச்சியால் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை அதிகரிக்கிறது.

இதனால் இந்திய பங்குச் சந்தைகளில் எழுச்சியுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது வரும் நாட்களிலும் தொடரும் என்றும் பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா

Web Editor

டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பி.,க்கள்!

Jayapriya

ரஜினி படத்தில் இணைந்த மலையாள நடிகர் விநாயகன்

EZHILARASAN D