புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல் Promande மற்றும் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஹோட்டல்களுக்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதிகளில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டு சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திலாஸ்பேட்டை பகுதியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லத்தில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணை நிலை ஆளுநர் மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.