ரத்தம் ரத்தம்… வழிந்திட கத்தும் கத்தும்… உயிர்களின் சத்தம்…! ’ரத்தம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!

ரத்தம் ரத்தம்… வழிந்திட கத்தும் கத்தும்… உயிர்களின் சத்தம்…! என்கிற வரிகளுடன் ’ரத்தம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது! தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 எடுத்து தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் சிஎஸ் அமுதன்.…

ரத்தம் ரத்தம்… வழிந்திட கத்தும் கத்தும்… உயிர்களின் சத்தம்…! என்கிற வரிகளுடன் ’ரத்தம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!

தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 எடுத்து தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் சிஎஸ் அமுதன். அவர் இயக்கியுள்ள புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர்.

கண்ணன் நாராயணன் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதோடு கடந்தாண்டு வெளியான ‘ரத்தம்’ பட டீசரில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் பார்வை போஸ்டர், முதல் பாடல், இரண்டாவது பாடல், இசை வெளியீட்டு விழா, இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையான பேச்சு என சகலவிதமான தமிழ் சினிமாவின் போக்கினை கிண்டல் செய்து படத்தின் ரிலீஸ் தேதியினை விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரினை இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளனர். படம் செப்.28 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/vp_offl/status/1700474539631861839

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.