வெளியானது #Black திரைப்படத்தின் டிரெய்லர்!

ஜீவா நடிப்பில் உருவாகி வரும் பிளாக் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிளாக்’. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். பொடன்சியல்…

#Block Trailer Released!

ஜீவா நடிப்பில் உருவாகி வரும் பிளாக் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிளாக்’. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். பொடன்சியல் ஸ்டுடியோஸ் (Potential studios) நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இதனை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். பிளாக் படம் த்ரில்லர் படமாக இருப்பதால் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே பிரதானமாக கொண்டு, ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவமாக இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்கப்படும். அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். அப்படிப்பட்ட கதைக்களத்துடன் உருவாகி வருகிறது பிளாக் திரைப்படம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.