29.4 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மக்களின் அளவு கடந்த அன்பை மட்டுமே பாஜக எதிர்பார்க்கிறது – அண்ணாமலை பேச்சு…

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து பாஜகவுக்கு ஒரு எம்பி கூட கிடைக்கவில்லை என்றாலும் பிரதமர் மோடி ஆட்சி அமைப்பது உறுதி என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

என் மண் என் மக்கள் யாத்திரை முதற்கட்ட பயணம் நெல்லை சட்டமன்ற தொகுதியுடன் நேற்று நிறைவு பெற்றது. நெல்லை டவுன் வாகையடி முனையில் நடைபெற்ற முதல் கட்ட பயண நிறைவு பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“23 நாள் என் மண் என் மக்கள் யாத்திரை தென் மாவட்டங்களில் உள்ள 41 சட்டமன்ற தொகுதியில் நடந்துள்ளது. 184 கிலோமீட்டர் பயணம் செய்து 17 சதவீத பயணத்தை மேற்கொண்டு இந்த யாத்திரையின் முதல் கட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு ஆட்சியில் இந்தியா மாறி உள்ளது. சாமானிய மக்களை பற்றி சிந்திக்க கூடிய ஆட்சி என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வந்துள்ளது.

நெல்லை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நெல்லைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை ரயில்வே துறை செய்து வருகிறது.  தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம். மோடி ஆட்சி அமைப்பதற்கு முன்பு அரசால் கொண்டு வரும் திட்டங்கள் எதுவும் முடியாது என்றே பலரும் சொல்லி வந்தனர். பிரதமர் மோடி ஆட்சி அமைத்த பின்னர் முடியாததையும் முடியும் என்று செய்து காட்டி உள்ளார்.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு சூழலில் பேசும்போது 100 ரூபாய் மக்களுக்காக மத்திய அரசிடமிருந்து அனுப்பி வைத்தால் மாநில அரசு மூலமாக 15 ரூபாய் மட்டுமே சென்று சேர்வதாக தெரிவித்தார். இந்த நிலையை மோடி பதவி ஏற்ற பின்னர் மாற்றி காட்டியுள்ளார். விவசாயிகளுக்கு 6000 நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. எரிவாயு மானியம் நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது.

ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் பெருமையை பிரதமர் மோடி உலகறிய செய்துள்ளார். ஒரு காலத்தில் வழங்கப்படும் மத்திய அரசு விருதுகள், அனைத்தும் உயரிய நபர்களுக்கு மட்டுமே கிடைத்த சூழலை மாற்றி சாமானிய ஏழை எளிய மக்களும் பத்ம விருதுகள் பாரத ரத்னா விருதுகள் போன்றவை கிடைக்கும் வகையில் மோடி ஆட்சி அமைந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மோடி மீண்டும் பிரதமராகிய ஆட்சி அமைப்பார் என்பது அனைத்து நபர்களுக்கும் தெரிந்த ஒன்று தமிழ்நாட்டிலிருந்து ஒரு எம்பி கூட வரவில்லை என்றாலும் பிரதமர் மோடி ஆட்சி அமைப்பது உறுதி. உ.பி., கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத், டெல்லி போன்ற மாநிலத்தில் இருக்கும் அனைத்து தொகுதிகளும் பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு வெற்றி வாய்ப்பை தேடி தரும்.

தமிழ்நாடு மக்களாகிய நாம் 40க்கு 40 தொகுதியையும் வெற்றி பெறச் செய்வோம் என்ற சொல்ல வேண்டிய தருணம் 2024 பாராளுமன்ற தேர்தல். மக்களின் அளவு கடந்த அன்பை மட்டும் தான் பாஜக எதிர்பார்க்கிறது. பாரதப் பிரதமர் மீது தமிழ்நாடு மக்கள் அளவு கடந்த அன்பு வைத்துவிட்டால் எப்படிப்பட்ட மனிதனாலும் தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு வாக்குப் பெட்டிகள் அனல் பறக்கும் அளவில் வாக்குகள் குவியும்”

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram