ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்!

தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை காட்டாங்குளத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் புதுச்சேரி ஆளுநரும், பாஜக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.