#Bike is not mechanism.. its emotion – பைக்கிற்கு பிறந்தநாள் கொண்டாடிய நபர்… வைரலாகும் வீடியோ!

கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பைக்கிற்கு கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே ஆண்களுக்கு வாகனங்களின் மீது ஆர்வமும், ஈர்ப்பும் அதிகமாக இருக்கும். பல இளைஞர்களின் கனவு,…

Bike is not mechanism.. its emotion - The person who celebrated the birthday of the bike... the video goes viral!

கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பைக்கிற்கு கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே ஆண்களுக்கு வாகனங்களின் மீது ஆர்வமும், ஈர்ப்பும் அதிகமாக இருக்கும். பல இளைஞர்களின் கனவு, ஒரு சொந்த பைக் வாங்க வேண்டும் என்பதுதான். பொல்லாதவன் படத்தில் கூட தனுஷ் தனது பைக் மீது வைத்திருக்கும் காதல் அலாதியானது என அனைவரும் அறிவர். அதுபோலத்தான் அனைத்து ஆண்களும் தங்கள் பைக் மீது வைத்திருக்கும் காதல்.

இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது பைக்கிற்கு பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பைக்கின் முதல் பிறந்தநாளை கொண்டாட நினைத்த அவர், பைக்கின் முன் டயரில் கத்தியை கயிற்றால் கட்டி, வண்டியை ஸ்டார்ட் செய்து முன் பக்கத்தில் கேக்கை கையில் ஏந்தியவாறு நிற்கிறார்.

ஸ்டார்ட் செய்ததும் டயர் நகர்ந்து, கத்தி கேக்கை வெட்டுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில், பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுவும் ஆண்களுக்கும் உணர்வுகள் இருக்கும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.