எஸ்யூவி காரை வசதியான படுக்கையறையாக மாற்றியவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொன், பொருள் இவற்றின் மீது ஆசையில்லாதவர்களைக்கூட நம்மால் பார்த்துவிட முடியும். சொந்த வீடு கனவு இல்லாத ஓர் நபரைக் காண்பது மிகவும் கடினம். இருப்பினும் பலருக்கு அது நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகின்றது. இவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவே வாடகை வீடுகள் இருக்கின்றன. ஆனால், நாம் பார்க்க இருப்பது வழக்கமான வாடகை வீட்டை பற்றியதல்ல.
அந்த வகையில், யூடியூபில் பல்வேறு வாகனங்களில் பரிசோதனை செய்வதைக் காட்டுகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கார்களை விமர்சனம் செய்வது மட்டுமல்லாமல், கார்களை எவ்வாறு மாற்றியமைப்பது என்பதையும் சிலர் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் தான் தீபக் குப்தா. இவரின் “முழுநேரப் பயணி, யூடியூபர் மற்றும் மோட்டோவ்லாக்கிங்”. அந்த வகையில் அவரின் சமீபத்திய வீடியோ மக்களை திகைக்க வைத்துள்ளது. அவர் எஸ்யூவி காரை வசதியான படுக்கையறையாக மாற்றுவது குறித்த வீடியோதான் அது.
SUVக்குள் படுக்கையை அமைக்கும் திட்டத்தை குப்தா விளக்குவதைக் வீடியோவில் நம்மால் காண முடிகிறது. இந்த வீடியோ ஜூலை 23 அன்று வெளியிடப்பட்டது. பகிரப்பட்டதிலிருந்து, வீடியோ 79,000 பார்வைகளைக் குவித்துள்ளது. மேலும் கிட்டத்தட்ட 3,000 லைக்குகளைப் பெற்று இணையத்தில் வைரலாகியுள்ளது.







