ஏப்ரலில் வெளியாகும் ‘பீஸ்ட்’: நடிகர் விஜய் டுவிட்

‘பீஸ்ட்’ படத்தின் போஸ்டரையும், வெளியீட்டுத் தேதியும் நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு…

‘பீஸ்ட்’ படத்தின் போஸ்டரையும், வெளியீட்டுத் தேதியும் நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட்’ பஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் செகெண்ட் லுக் போஸ்டரில் துப்பாக்கிகளுடன் விஜய் இருக்கும் காட்சி ரசிகர்களை கவர்ந்தது. இதனால், பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

மூன்றாவதாக வெளியாகியிருக்கும் இந்தப் போஸ்ரில் ஆயுதமே எதுவும், இல்லாமல் பார்வையாலேயே மிரட்டும் வகையில் அந்த போஸ்டர், கவனம் ஈர்த்து வருகிறது. ‘பீஸ்ட்’ படம் வரும் ஏப்ரலில் வெளியாகவிருக்கிறது என்ற அப்டேட்டையும் வெளியிட்டு ரசிகர்ளுகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.