AI போன்ற தொழில்நுட்பங்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என மலேசியா நாட்டின் அமைச்சர் சிவகுமார் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் 11 ஆவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மலேசியா நாட்டின் அமைச்சர் சிவகுமார் நியூஸ் 7 தமிழுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.
இது தொடர்பாக, நியூஸ் 7 தமிழ் சென்னை மண்டல தலைமைச் செய்தியாளர் சிரில் தேவாவுக்கு மலேசியா நாட்டின் அமைச்சர் சிவகுமார்அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
தமிழர்களுக்கு நிறைய சவால்கள் உள்ளது. தமிழர்களாக இருந்து தமிழ் பேச முடியாதவர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். கணினி யுகத்தில் தமிழ் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும்.
AI போன்ற தொழில்நுட்பங்கள் வந்துள்ளது அந்த சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தமிழ்ப் பள்ளியில் மாணவர்களுக்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்திப் பாடங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். தமிழறிஞர்களின் ஆய்வுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.







