சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை ; மத்திய அரசு அறிவிப்பு – காரணம் என்ன…?

சர்க்கரை ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30 வரை தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இந்தியா விளங்கி வருகிறது. ஆனால் சமீபகாலமாக நாட்டில் கரும்பு விளைச்சல் குறைந்து வருகிறது. இதனால் நுகர்வு அளவை விட சர்க்கரை உற்பத்தி பின்தங்கியுள்ளது.

இந்த நிலையில் சர்க்கரையின் உள்நாட்டு விலையை கட்டுப்படுத்தவும், போதுமான உள்ளூர் இருப்பை உறுதி செய்யவும் செப்டம்பர் 30 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் (DGFT) வெளியிட்ட அறிவிப்பின் படி, கச்சா சர்க்கரை, வெள்ளை சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆகியவற்றின் ஏற்றுமதி தடைசெய்யப்பட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டுகிறது. இந்த தடை செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும். அதே நேரம் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் படி ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவுக்கான சர்க்கரை ஏற்றுமதி தொடரும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.