குற்றால அருவிகளில் தண்ணீர் குறைவாக வரும் நிலையிலும், பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று
மாதங்கள் மட்டுமே சீசன் காலமாகும். இந்நிலையில், நேற்று குற்றாலத்தில் சாரல் மழை பெய்தது. ஐந்தருவியில் நான்கு கிளைகளில் மட்டும் தண்ணீர் வருகிறது.
இன்று பக்ரீத் பண்டிகை விடுமுறை தினம் என்பதால் ஐந்தருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீராடினர். மெயின் அருவியில் குறைந்த அளவு தண்ணீர் வருவதால் ஆண்கள் குளிக்கும் பகுதியில் கை குழந்தைகளுடன் நீண்ட நேரம் வரிசையில் நின்று குளித்து
வருகின்றனர்.
வார இறுதி நாட்களில் அதிக கூட்டம் வரும் என்பதால் போலீசார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதிகளில் மெல்லிய சாரல் மழைத்துளிகளுடன் மேகமூட்டத்துடன் ரம்மியமான பருவநிலை நிலவுகிறது. தற்போது வரை பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகள் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் உள்ளது.





