தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் குட்டி யானை குளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அழகான காணொளிகள் ஏராளமாக இருப்பதால் இணையம் பொழுதுபோக்கச் சிறந்த இடம் என்பதில் சந்தேகமில்லை. குட்டி யானை தண்ணீர் தொட்டியில் குளிப்பதை இந்த வீடியோ காட்டுகிறது. 7 வினாடிகள் கொண்ட இந்த கிளிப்பில், குட்டி யானை தொட்டியில் உற்சாகமாகக் குளிப்பதைப் பார்ப்போரை மகிழ்ச்சியாக்குகிறது.
இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசந்தா நந்தா டிவிட்டரில் இந்த கிளிப்பைப் பகிர்ந்துள்ளார். புதிதாகப் பிறந்த யானை குட்டி, தண்ணீர் நிரம்பிய தொட்டியில் குதித்ததைக் காட்சிகளில் காணலாம்.
https://twitter.com/susantananda3/status/1646175462446743553?s=20
யானையின் விளையாட்டு நடவடிக்கைகள் அது உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும் இருப்பதைக் குறிக்கிறது. “இந்தக் குட்டி யானை குளிப்பதைப் பார்ப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது” வன சேவை (IFS) அதிகாரி நந்தா கிளிப்பில் தலைப்பிட்டுள்ளார். நெட்டிசன்கள் இந்த வீடியோவை பாராட்டி தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளப் பல கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.







