ஆயுதபூஜை விடுமுறை; 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் -போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு 2 ஆயிரத்து 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி ஆயுதபூஜையை ஒட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள்…

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு 2 ஆயிரத்து 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 23ம் தேதி ஆயுதபூஜையை ஒட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் சொந்த ஊர் செல்வார்கள். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக,

சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.