அக்சர், ஜடேஜா அசத்தல் – இந்தியா முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி தன் முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவை தவிர, மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. ரோஹித் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 120 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஜடேஜா – அக்சர் பட்டேல் இணை நிதானமாக ஆடி ரன் சேர்த்தது. ஜடேஜா 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அக்சேர் பட்டேல் – முகமது சமி இணை சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. சமி 3 சிக்ஸர், 2 ஃபோர்களுடன் அதிரடியாக ஆடி 38 ரன்களை சேர்த்தார். அக்ஸர் பட்டேலும் சிறப்பாக ஆடி 84 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் டோட் முர்ஃபி 7 விக்கெட்களை வீழ்த்தினார். பேட் கம்மின்ஸ் 2, நேத்தன் லயன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் ஆஸியை விட, இந்திய அணி 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஒருகட்டத்தில் 240 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்திருந்த இந்திய அணிக்கு, கீழ் வரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் நல்ல முன்னிலை பெற்றுள்ளது.சற்று நேரத்தில் ஆஸி தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க உள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.