இந்தியாவில் அவெஞ்சர்ஸ் பட வசூலை முறியடித்த அவதார் 2 திரைப்படம்

அவதார் 2 திரைப்படம் இந்திய அளவில் ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் புரிந்த சாதனையை முறியடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூபாய் 450 கோடி வசூல் புரிந்து பெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த 2009 ஆம்…

அவதார் 2 திரைப்படம் இந்திய அளவில் ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் புரிந்த சாதனையை முறியடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூபாய் 450 கோடி வசூல் புரிந்து பெரும் சாதனை படைத்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, கானவுலகத்தை திரையில் காட்சிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த அவதார் முதல் பாகம் ஏராளமான விருதுகளையும் குவித்தது.

இதன் மூலம் உலகம் முழுவதும் அவதார் திரைப்படத்திற்கு என பல ரசிகர்களை உருவாக்கியது. இந்நிலையில், ஜேம்ஸ் கேமரூனின் அவதார் திரைப்படத்தின் 2 ஆம் பாகம்  அவதார் ”தி வே ஆப் வாட்டர்”  என பெயரிடப்பட்டு திரையில் வெளியாகி உலக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்றது.

இப்படத்தில் சாம் வொர்திங்டன், ஜோ சல்டானா, ஸ்டீபன் லாங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2009 இல் வெளியான அவதார் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் இரண்டாம் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ரூ.1000 கோடி செலவில் உருவான அவதார்  திரைப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் ரூ.280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

அதன் பின்னர்  கடந்த 2019-ம் ஆண்டு ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வெளியாகி இந்தியாவில் மட்டும்   ரூ 438 கோடி வசூலித்தது. ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் புரிந்த சாதனையை தற்போது ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’  திரைப்படம் முறியடித்துள்ளது.

  
‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படம் தற்போது வரை இந்தியாவில் மட்டும் ரூ.450 கோடியை வசூலித்துள்ளது. உலக அளவில் ரூ.15,000 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.