முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி – போலீசார் வழக்குப்பதிவு!

மதுரை உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சென்ற கார் மீது தாக்குதல் நடத்திய அமமுக நிர்வாகிகள் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்திபட்டியில் நடந்த…

மதுரை உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சென்ற கார் மீது தாக்குதல் நடத்திய அமமுக நிர்வாகிகள் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்திபட்டியில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், திருமங்கலம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

கார், மங்கல்ரேவு பகுதிக்கு அருகே சென்ற போது, அமமுக
நிர்வாகிகள் சிலர் கரை வழிமறித்து டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி ஆர்.பி.உதயக்குமாருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பியுள்ளனர்.

அபபோது, கார்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தினேஷ்குமார், அபினேஷ், விஷ்ணு
ஆகியோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பேரையூர் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.