ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம் பிடித்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தை பெற்றுள்ளது.
பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் அரையிறுதி சுற்றில் மலேசியா அணியை இந்திய அணி வீழத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 65 கிலோ வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஜப்பான் வீரர் கைகியிடம் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தோல்வியுற்றார்.







