பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்த தமிழ்நாடு வீராங்கனை வித்யா ராம்ராஜ்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் சாதனையை தமிழ்நாடு வீராங்கனை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார். 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் செப்டம்பர் 23 தொடங்கி நடைபெற்று…

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் சாதனையை தமிழ்நாடு வீராங்கனை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார்.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் செப்டம்பர் 23 தொடங்கி நடைபெற்று வருகின்றன. வருகிற அக்டோபர் 8 ஆம் தேதி வரை சீனாவின் 6  நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில்45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 61 பிரிவுகளில் நடைபெறும் 40 விளையாட்டுப் போட்டிகளில் 12 ஆயிரம் பங்கேற்கின்றனர்.

இதில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் இலக்கை அடைந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலமாக கேரளத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் சாதனையை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார்.

1984 ஒலிம்பிக் தொடரில் 55.42 வினாடிகளில் பி.டி. உஷா இலக்கை அடைந்தது சாதனையாக இருந்தது.

இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பி.டி. உஷாவின் சாதனையை முறியடிப்பதாக வித்யா ராம்ராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.