ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டி – முதல் ஆட்டத்தில் தென் கொரியா வெற்றி!

சென்னையில் தொடங்கியுள்ள ஆசிய சாம்பியன்ஸ் ஆண்கள் ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் தென்கொரியா அணி  ஜப்பானை வீழ்த்தியது. ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி…

சென்னையில் தொடங்கியுள்ள ஆசிய சாம்பியன்ஸ் ஆண்கள் ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் தென்கொரியா அணி  ஜப்பானை வீழ்த்தியது.

ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா,ஜப்பான், சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும், லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில் முதல் ஆட்டத்தில் தென்கொரியா அணியும் ஜப்பான் அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் போட்டி போட்டு விளையாடினர். இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனைத்தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் தென்கொரியா மேலும் ஒரு கோல் அடித்து 2க்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.