ஆரணி டவுன் கோட்டை ஸ்ரீ ரேணுகாம்பாள் திருக்கோயில் – குடமுழுக்கு பெருவிழா!

ஆரணி டவுன் கோட்டை ஸ்ரீ ரேணுகாம்பாள் திருகோயில்  குடமுழுக்கு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, ஆரணி டவுன் கோட்டை ஸ்ரீ ரேணுகம்பாள் திருக்கோயில் பொதுமக்களின் பங்களிப்பின் மூலம்…

ஆரணி டவுன் கோட்டை ஸ்ரீ ரேணுகாம்பாள் திருகோயில்  குடமுழுக்கு பெருவிழா
வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை, ஆரணி டவுன் கோட்டை ஸ்ரீ ரேணுகம்பாள் திருக்கோயில்
பொதுமக்களின் பங்களிப்பின் மூலம் ஸ்ரீரேணுகாம்பாள், ஸ்ரீவரசக்தி விநாயகர்,
ஸ்ரீவெள்ளிதெய்வானை, முருகப்பெருமான், பரிகாரமூர்த்திகள், நாககன்னிகை உள்ளிட்ட
சுவாமி ஆலையத்தை புனரமைத்து வண்ணங்கள் பூசப்பட்டன.

மேலும் கோயில் அருகே யாகசாலை பந்தலிட்டு பல்வேறு கங்கை நதிகளில் இருந்து
கொண்டுவரப்பட்ட புனிதநீரை 1001 கலசங்களில் மூலிகை திரவியங்களை கொண்டு
நிறுவப்பட்டன.


சிவாச்சாரியர்கள் ஐந்துகால வேள்விகளை எழுப்பி பூஜிக்கப்பட்ட புனிதநீரை பம்பை
உடுக்கை மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று கோபுரத்தின் மீது புனிதநீரை ஊற்றி
குடமுழுக்கு பெருவிழாவானது வெகுவிமர்சையாக நடைபெற்றன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.