இந்தியப் பயனர்களுக்காக ஆப்பிள் நிறுவனம் ‘Back to School’ சலுகையை அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள் ஐபேட், மேக்புக் மாடல்களுக்கு இத்திட்டத்தின் மூலம் சிறப்பு சலுகைகளைப் பெற முடியும்.
பல்வேறு நாடுகளில் ‘Back to School’ திட்டத்தின் கீழ் இந்த சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சலுகையின் கீழ் ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் மற்றும் ஆறு மாதங்களுக்கான ஆப்பிள் மியூசிக் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. மேலும், ஏர்பாட்ஸ் ஜென் 3 மாடலுக்கு அப்கிரேடு செய்யும் போது ரூ. 6 ஆயிரத்து 400 செலுத்தினால் போதும். இத்துடன் ஆப்பிள் கேர் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆப்பிள் ‘Back to School’ சலுகை செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது.
மேக்புக் ஏர் (M1) – இந்த மாடலை வாங்குபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 இலவசமாக வழங்கப்படும். மேக்புக் ஏர் M1 மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 900. தற்போது ரூ. 89 ஆயிரத்து 900-க்கு இந்த மாடல் கிடைக்கிறது.
மேக்புக் ஏர் M2 – இந்த மாடல் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 மாடலை இலவசம். மேக்புக் ஏர் M2 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900. தற்போது ரூ. 1 லட்சத்து 9 ஆயிரத்து 900க்கு கிடைக்கிறது. ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 இலவசம்.
மேக்புக் ப்ரோ 13 இன்ச் – இந்த மாடலுக்கும் ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 மாடல் இலவசம். ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி. இந்தியாவில் மேக்புக் ப்ரோ 13 இன்ச் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900.
மேக்புக் ப்ரோ 14 இன்ச் – இந்த மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி. ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 மாடல் இலவசம். மேக்புக் ப்ரோ 14 இன்ச் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 95 ஆயிரத்து 410. தற்போது ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்து 410-க்கு விற்கப்படுகிறது.
மேக்புக் ப்ரோ 16 இன்ச் – இந்தமாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி. இந்தியாவில் மேக்புக் ப்ரோ 16 இன்ச் மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 39 ஆயிரத்து 900 முதல் விற்கப்படுகிறது. தற்போது ரூ. 2 லட்சத்து 15 ஆயிரத்து 910 விலையில் கிடைக்கிறது. ஏர்பாட்ஸ் ஜென் 2 இலவசம்.
ஐமேக் – ஐமேக் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 910 முதல் தொடங்குகிறது. ரூ. 12 ஆயிரம் தள்ளுபடி விலையில் தற்போது ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 910 விலையில் பெறலாம். ஏர்பாட்ஸ் ஜென் 2 இலவசம்.
ஐபேட் ஏர் – இந்த மாடலுக்கு ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ஏர்பாட்ஸ் ஜென் 2 இலவசம். இந்தியாவில் இதன் விலை ரூ. 54 ஆயிரத்து 900 முதல் தொடங்குகிறது.
ஐபேட் ப்ரோ – ரூ. 3 ஆயிரத்து 600 தள்ளுபடி. ரூ. 14 ஆயிரம் மதிப்பிலான ஏர்பாட்ஸ் ஜென் 2 இலவசம். இதன் விலை ரூ. 71 ஆயிரத்து 900 முதல் துவங்குகிறது.
-ம.பவித்ரா








