டெல்லியில் அடையாளம் தெரியாத நபர்களால் 2 பெண்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
ஆர்.கே.புரம் அருகே அம்பேத்கர் பஸ்தி பகுதியில் வசித்து வரும் சகோதரிகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் அதிகாலை 4 மணி அளவில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதுகுறித்து ஆர்.கே. புரம் காவல்துறைக்கு அதிகாலை 4.40 மணிக்கு தகவல் வந்துள்ளது. தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், படுகாயமடைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் எஸ்.ஜே மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் பிங்கி (30), ஜோதி (29) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
https://twitter.com/vinaytiwari9697/status/1670253210135584769?s=20
மேலும், துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் கூறியுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.







