‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் தந்தையர் தினத்தினை முன்னிட்டு இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகியாகிள்ளது.
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சிறுகதை ஒன்றை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி ஜனவரி 14ம் தேதி நிறைவடைந்தது.
அத்துடன், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் , இயக்குனர் பாரதிராஜா மற்றும் இப்படத்தை இயக்கிய தங்கர் பச்சான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
A Father's Love is sacrificial, patient, kind, humble, honest, forgiving, faithful, and selfless
Team #KarumegangalKalaigindrana wishes you all a #HappyFathersDay @thankarbachan @offBharathiraja @VAU_Media #DuraiVeeraSakthi@gvprakash @menongautham @AditiBalan @iYogiBabu pic.twitter.com/afovJdE1Aw
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) June 18, 2023
இந்நிலையில் தற்போது, தந்தையர் தினத்தினை முன்னிட்டு இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகியாகிள்ளது.








