29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுதேர்வுகள் தொடங்கும் தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, மே 6-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை நடைபெறும் எனக் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை நடைபெறும் எனவும், 12-ம் வகுப்பிற்கான பொது தேர்வு மே 5-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரையிலும் நடபெறும் என தெரிவித்தார்.

அதோடு, தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரையில், தோராயமாக 10-ம் வகுப்பிற்கு 17ம் தேதியும், 11-ம் வகுப்புகளுக்கு ஜூலை 7-ம் தேதியும், 12ம் வகுப்புக்களு ஜூன் 23-ம் தேதியும் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 2 வரை நடைபெறும் எனவும் அறிவித்தார்.

மேலும், 10 மற்றும் 11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை (dge.tn.gov.in, tnschools.gov.in) இணையதளங்களில் வெளியிடப்படும் என்ற அவர், 12ம் வகுப்புகளுக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தவறுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading