திமுக அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை வெளியிடுவேன்- அண்ணாமலை

வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் முழுமையான சொத்துப்பட்டியலை தாம் வெளியிட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  திருப்பூரில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.…

வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் முழுமையான சொத்துப்பட்டியலை தாம் வெளியிட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

திருப்பூரில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, தாம் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச்சுக்கான ரசீதை வெளியிட திமுகவினர் வலியுறுத்தி வருவதற்கு பதில் அளித்தார்.

கடந்த 75 ஆண்டுகளாக எந்த அரசியல்வாதியும் செய்யாததை வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தாம் செய்யப்போவதாக அண்ணாமலை கூறினார். ரஃபேல் வாட்ச்சுக்கான ரசீது மட்டுமல்லாமல் ஐபிஎஸ் அதிகாரியாக தாம் வேலை பார்த்தபோது பெற்ற ஊதியம், அதற்கான செலவு விபரங்கள், கிரெடிட் கார்டு பில் விபரங்கள் உள்பட தமது சொத்து விபரங்கள் அனைத்தையும் வெளியிடப் போவதாக அண்ணாமலை கூறினார்.

தமது சொத்துப்பட்டியல் மட்டுமல்லாது, திமுக அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களின் உண்மையான சொத்து மதிப்பு, பினாமி பெயரில் வாங்கியுள்ள சொத்துக்களின் மதிப்பு ஆகியவற்றை தனி இணையத்தளம் தொடங்கி அதில் தாம் வெளியிடப்போவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.