33 C
Chennai
May 14, 2024
செய்திகள்

500 கோடியை தாண்டிய அனிமல் திரைப்படம்! – பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்…

“அனிமல்” திரைப்படத்தின் 5 நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தில்  பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர்,  ராஷ்மிகா இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  படத்தில் வன்முறை காட்சிகள் ரத்தம் தெறிக்கக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  அப்பா மகனுக்கிடையில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இந்த படம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பெற்றது.

இயக்குநரின் சொந்தத் தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தில் பிரபல நடிகர் சன்னி தியோலின் சகோதரரான பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். தெலுங்கு,  தமிழ்,  ஹிந்தி,  மலையாளம்,  கன்னடம் என 5 மொழிகளிலும் டிச.1-ம் தேதி இந்தத் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, “அனிமல்” திரைப்படம் வெளியான ஒரு வாரம் ஆன நிலையில் ரூ. 527 கோடியே வசூல் செய்துள்ளது.  இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading