“அனிமல்” திரைப்படத்தின் 5 நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்திருந்தது.
படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் வன்முறை காட்சிகள் ரத்தம் தெறிக்கக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பா மகனுக்கிடையில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இந்த படம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பெற்றது.
இயக்குநரின் சொந்தத் தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தில் பிரபல நடிகர் சன்னி தியோலின் சகோதரரான பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் டிச.1-ம் தேதி இந்தத் திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, “அனிமல்” திரைப்படம் வெளியான ஒரு வாரம் ஆன நிலையில் ரூ. 527 கோடியே வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.







