இந்தியா

முதியவரின் சடலத்தை சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ; குவியும் பாராட்டு

ஆந்திராவில் ஆதரவற்ற முதியவரின் சடலத்தை சுமார் 2கி.மீ சுமந்து சென்ற பெண் எஸ்.ஐக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த காசிபக்கா நகராட்சியில், அதிவிக்கொத்துரு கிராமம் உள்ளது. இங்குள்ள விவசாய நிலத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக காசிபக்கா காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்.ஐ சிரிஷா ஆதிவிகோட்டுரு கிராமத்துக்கு 2 போலீஸாருடன் விரைந்தார். சடலம் இருக்கும் வயல்பகுதியில் சாலை வசதி இல்லாததால் வாகனத்தை 2 கி,மீ. தொலைவில் நிறுத்திவிட்டு சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு அந்த முதியவரின் சடலம் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி இருந்தது. இதனால், பலரும் அந்த சடலத்துக்கு அருகில் வராமல் தொலைவிலேயே நின்றிருந்தனர்.

இதையடுத்து, அங்கிருந்தவர்களிடம் எஸ்.ஐ சிரிஷா நடத்திய விசாரணையில்,
இறந்த முதியவர் அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்த பிச்சைக்காரர் என்பது தெரியவந்தது. அதன்பின், தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முதியவரின் உடலை அடக்கம் செய்ய எஸ்.ஐ சிரிஷா முடிவெடுத்தார். அவரின் உடலை வயல்பகுதியில் இருந்து சாலைக்கு எடுத்து செல்ல அங்கிருந்த கிராம மக்களின் உதவியை நாடினார். ஆனால், இறந்தவரின் உடலில் இருந்து ஏற்கெனவே துர்நாற்றம் வீச ஆரம்பித்திருந்ததால் கிராம மக்கள் அதற்கு மறுத்துவிட்டனர். இதையடுத்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் தனது தோளில் முதியவர் உடலை சுமந்து கொண்டு 2 கி.மீ தூக்கிச் சென்றார். அத்துடன் முதியவருக்கான இறுதி சடங்கை தனது சொந்த பணத்தில் செய்தார். இதுதொடர்பான வீடியோவை ஆந்திரா போலீஸார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து பலரும் எஸ்.ஐ சிரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

பிரபல மாடல் தியாவின் திருமணத்தை நடத்தி வைத்த பெண் மதகுரு!

Halley karthi

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 24 பேர் உயிரிழப்பு!

Ezhilarasan

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு!

Jeba Arul Robinson

Leave a Reply