கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி 9 வயது ஆந்திர சிறுமி சாதனை!

ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த 9 வயது சிறுமி ரித்விகா ஸ்ரீ. உலகிலேயே உயரமான கிளிமஞ்சாரோ சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார். இந்தத் தகவலை அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் காந்தம் சந்துருடு தனது ட்விட்டரில்…

ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த 9 வயது சிறுமி ரித்விகா ஸ்ரீ. உலகிலேயே உயரமான கிளிமஞ்சாரோ சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.

இந்தத் தகவலை அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் காந்தம் சந்துருடு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிய உலகின் இரண்டாவது இளம்நபர் மற்றும் ஆசியாவின் இளைய பெண் எனும் சாதனையை படைத்துள்ள ரித்விகாஸ்ரீக்கு வாழ்த்துக்கள். பல சோதனைகளை சந்தித்த போதிலும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்தி கொண்டீர்கள். தொடர்ந்து இதுபோன்று பல்வேறு சாதனைகள் புரிந்து மற்றவர்களுக்கு ஊக்கமளியுங்கள்” என்று தெரிவித்துள்ளார். கிளிமஞ்சாரோ கடல் மட்டத்திலிருந்து 5,681 மீட்டர் உயரம் கொண்டது.

ரித்விகாஸ்ரீ தனது தந்தையின் உதவியுடன் இந்த சாதனையை புரிந்துள்ளார். தந்தை கிரிக்கெட் பயிற்சியாளராகவும், விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் ரித்விகா ஸ்ரீ தனது பள்ளி படிப்பின் போதே மலை ஏறுதல் பயின்று பல்வேறு விருதுகள் பெற்றதும், லாடாக் எல்லையில் பயிற்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.