பொது சிவில் சட்டம் ஒரு மதத்திற்கு எதிரானது என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி : தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

பொது சிவில் சட்டம் ஒரு மதத்திற்கு எதிரானது என்ற மாயத்தோற்றத்தை சிலர் உருவாக்க முயற்சிப்பதாக தெலுங்கானா ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான…

பொது சிவில் சட்டம் ஒரு மதத்திற்கு எதிரானது என்ற மாயத்தோற்றத்தை சிலர் உருவாக்க முயற்சிப்பதாக தெலுங்கானா ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார். 
தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:
“இந்து மத விழாக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்வது கிடையாது. திமுக எம்பி கனிமொழி அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் கூடுதல் பேருந்து  விட வேண்டும்  என கூறி இருந்தால் பாரபட்சம் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட விழாவுக்கு மட்டும் கூடுதல் ரயில் சேவை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  எனவே, பாரபட்சம் இல்லாத ஆன்மிக நிலைமை இருக்க வேண்டும். நமது ஆன்மிகம்  உலகிற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டம் என்றால் பொதுவாக இருக்கின்ற ஒரு சட்டம். இது தவறாக முன்னிறுத்தப்படுகிறது என தமிழிசை கூறினார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா, மாமன்னன் திரைப்படம் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே தமிழிசை அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.