அமெரிக்க ஏற்றுமதி கவுன்சில் முக்கிய பதவியில் இந்திய வம்சாவளி பெண்… யார் இந்த ஷமினா சிங்?

அமெரிக்காவின் ஏற்றுமதி கவுன்சில் முக்கிய பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷமினா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.  அமெரிக்காவின் ஏற்றுமதி கவுன்சில் சர்வதேச வர்த்தகத்தில் ஒரு முக்கிய ஆலோசனை அமைப்பாக செயல்படுகிறது. ஜூலை 14 அன்று வெள்ளை…

அமெரிக்காவின் ஏற்றுமதி கவுன்சில் முக்கிய பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷமினா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் ஏற்றுமதி கவுன்சில் சர்வதேச வர்த்தகத்தில் ஒரு முக்கிய ஆலோசனை அமைப்பாக செயல்படுகிறது. ஜூலை 14 அன்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், இந்த கவுன்சிலின் முக்கிய பொறுப்பில் ஷமினா சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜோ பைடன் அறிவித்தார். ஷமினா சிங் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார்.

ஜோ பைடன் நிர்வாகத்தில் இந்திய-அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் ஷமினா சிங்கும் தற்போது அவர்களுடன் இணைந்துள்ளார். இதன் மூலம் ஜோ பைடன்  நிர்வாகத்தில் முக்கியமான பதவிகளில் பணிபுரியும் இந்திய-அமெரிக்கர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. அமெரிக்க ஏற்றுமதி கவுன்சிலில் தன்னை இணைத்துக் கொள்வது பெருமையாக இருப்பதாக ஷமினா சிங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஏற்றுமதி கவுன்சில் சர்வதேச வர்த்தகத்திற்கான முதன்மை தேசிய ஆலோசனைக் குழுவாக செயல்படுகிறது. அமெரிக்க வர்த்தகத்தை பாதிக்கும் மற்றும் ஏற்றுமதி விரிவாக்கத்தை ஊக்குவிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஏற்றுமதி கவுன்சில் அதிபருக்கு ஆலோசனை வழங்குகிறது. வணிகம், தொழில்துறை, விவசாயம், தொழிலாளர் மற்றும் அரசு துறைகளுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளை விவாதிப்பதற்கும் தீர்வு காண்பதற்கும் இந்த கவுன்சில் உதவுகிறது.

ஷமினா சிங் யார்?

ஷமினா சிங் தற்போது மாஸ்டர்கார்டில் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார். 2018 ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் நிதிச் சேர்க்கையை முன்னெடுப்பதற்காக  மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் தலைவராக ஷமினா சிங் நியமிக்கப்பட்டார்.

ஷமினா சிங் வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் உயர் பதவிகளை வகித்துள்ளார். ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் தொடர்பான அதிபரின் முதல் ஆலோசனைக் குழுவின் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். 2015 ஆம் ஆண்டில், ஷமினா அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்டார். அமெரிக்க செனட்டால் ஆறு வருட காலத்திற்கு AmeriCorps குழுவில்
பணியமர்த்தப்பட்டார். தலைவராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

அவர் பொதுப் பிரச்சினைகளுக்கான அமெரிக்காவின் எட் கவுன்சிலின் ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராகவும் உள்ளார். மேலும் ஆஸ்பென் இன்ஸ்டிடியூட் சிவில் சொசைட்டி பெல்லோஷிப் மற்றும் நியூயார்க் நிதிச் சேவைகள் புதுமைத் துறையின் ஆலோசனைக் குழுவிலும் உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.