சிஎஸ்கே வீரர்களுக்கு ஹைதராபாத் பிரியாணி – சர்ப்ரைஸ் கொடுத்த அம்பத்தி ராயுடு!

சிஎஸ்கே அணி வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் அணி வீரரான அம்பத்தி ராயுடு ஹைதராபாத் பிரியாணி வழங்கி சர்பிரைஸ் கொடுத்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர்.  ஐபிஎல் போட்டிகளில்…

சிஎஸ்கே அணி வீரர்களுக்கு அந்த அணியின் முன்னாள் அணி வீரரான அம்பத்தி ராயுடு ஹைதராபாத் பிரியாணி வழங்கி சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர்.  ஐபிஎல் போட்டிகளில் அனல் பறப்பதால் ஒவ்வொரு வருடமும் இத்தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடப்பு ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி அதிரடியாக விளையாடி வந்த நிலையில் ஹாட்ரிக் வெற்றி பெறும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதிய மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவியது. எட்டாவது பேட்ஸ்மேனாக மகேந்திர சிங் தோனி களமிறங்கி அதிரடியாக பந்துகளை பவுண்டிரிகளுக்கும் சிக்ஸ்சர்களுக்கும் பறக்கவிட்டார்.

இதன் மூலம் தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் துவண்டிருந்தாலும் தோனியின் நடப்பு சீசன் ஓப்பனிங் ஆட்டம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதன் மூலம் முதலிடத்தில் இருந்த சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு இறங்கியது.

சிஎஸ்கே அணியில் இருந்த வீரரான அம்பத்தி ராயுடு கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று திடீரென ஆந்திர அரசியலில் குதித்தார். இந்த நிலையில் அம்பத்தி ராயுடு பழைய பாசத்தை மறக்காமல் தனது சிஎஸ்கே அணி வீரர்களுக்கு ஹைதராபாத் பிரியாணி வழங்கியுள்ளார்.

https://twitter.com/ChennaiIPL/status/1775801161817219227

சிஎஸ்கே அணி வீரர்களுக்கு அம்பத்தி ராயுடு பிரியாணியை பரிமாறும் வீடியோவை சிஎஸ்கே அணி தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு “பிரியாணி , சூப்பர் குடும்பம்” என பதிவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.