பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நடுவே காதலரை அறிமுகம் செய்த அமலா பால் -வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!

தன் பிறந்த நாளன்று ஜெகத் தேசாய் என்பவருடன் அமலா பால் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆடை படத்திற்கு பிறகு ஏற்பட்ட சர்ச்சை மற்றும் ஏ.எல். விஜய் உடனான விவாகரத்துக்கு…

தன் பிறந்த நாளன்று ஜெகத் தேசாய் என்பவருடன் அமலா பால் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆடை படத்திற்கு பிறகு ஏற்பட்ட சர்ச்சை மற்றும் ஏ.எல். விஜய் உடனான விவாகரத்துக்கு பிறகு நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் இருந்து ரொம்பவே ஒதுங்கி சென்று விட்டார். கடைசியாக கடாவர் படத்தை தயாரித்து நடித்து இருந்தாலும், அந்த படத்தை ஓடிடியில் மட்டுமே ரிலீஸ் செய்திருந்தார்.

1991-ம் ஆண்டு நடிகை அமலா பால் கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் பிறந்தார். மாடலிங்கில் இருந்த ஆர்வம் அவரை அப்படியே 2009ல் நீல தாமரா படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.  சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அமலா பால் அறிமுகமானாலும்,  அவருக்கு மைனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது முன்னணி நடிகை அந்தஸ்த்தை அளித்தது.

இன்று தனது 32-வது பிறந்தநாளை நடிகை அமலா பால் கொண்டாடி வரும் நிலையில், அமலா பாலின் நெருங்கிய நண்பராக ஜனா தேசாய் என்பவர் அவருக்கு லவ் ப்ரபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஜெகத் திடீரென்று நடனக் கலைஞர்களிடம் வந்து சேர்ந்து கொள்கிறார். நடனமாடும் போது திடீரென மோதிரத்தை எடுத்து அமலாவிடம் ப்ரோபோஸ் செய்தார்.

அந்த வீடியோவில் அமலா அந்த மோதிரத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு ஜெகத்துக்கு அன்பான முத்தம் கொடுப்பதைக் காணலாம்.  வீடியோவில் Wedding Bells என்ற ஹேஷ்டேக்கும் சேர்க்கப்பட்டுள்ளது.  விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.